குறைந்த ரன்களில் எதிரணியை சுருட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறுவது எப்படி?
நடப்பு ஐபிஎல் தொடரில் சராசரி ரன்கள் மட்டுமே அடித்து எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி வெற்றி வாகைசூடுவது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. #IPL2018 #SRH #SunRisersHyderabad குறைந்த ரன்களில் எதிரணியை சுருட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறுவது எப்படி? நடப்பு ஐபிஎல் தொடரில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வரும் அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. முன்னணி வீரர்கள் என அனியில் பெரிதாக யாரும் இல்லை. தடை காரணமாக வார்னர் விளையாட முடியாத சூழல். நட்சத்திர வீரராக உள்ள தவான், மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மணிஷ் பாண்டே ஆகியோரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. மொத்தத்தில் அணியின் பேட்ஸ்மேன்கள் இதுவரை தங்களது திறமையை வெளிக்காட்டாமலேயே உள்ளனர். இதனால், அந்த அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் சராசரி ரன்களையே எடுத்து வருகிறது. ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் 130 முதல் 150 ரன்கள் வரை மட்டுமே எடுத்துள்ளது. பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான இரு சேசிங் ஆட்டங்களிலும் மட்டுமே அந்த அணி 170 ரன்களை தாண்டியுள்ளது. ஆனால், அந்த இரு போட்டிகளிலுமே ஐதராபாத் தோல்வி...